Kaalathukkum Nee Venum song out now

Advertisment

மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு 'வெந்து தணிந்தது காடு', பத்து தல ஆகிய படங்களில்நடித்து வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்குநர்கெளதம் மேனன் இயக்கி வருகிறார்.இவர்கள்கூட்டணியில் வெளியானபடங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதுரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

'வெந்து தணிந்தது காடு' படத்தில் கதாநாயகிகளாககயாடு லோகர் மற்றும்சித்தி இட்னானி நடிக்கின்றனர்.வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்குஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில்ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாடலானகாலத்துக்கும் நீ வேணும் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் தாமரை வரிகளில்சிம்பு மற்றும் ரக்ஷிதா சுரேஷ் ஆகியோர் பாடியுள்ளனர். அழகான காதல் பாடலாகவெளியாகியுள்ள இப்பாடல் சமூக வலைத்தளங்களில் பலரின்கவனத்தை பெற்று வருகிறது.

Advertisment