Skip to main content

பிரபல தெலுங்கு நடிகருடன் இணைந்த விஷ்ணு விஷால் - கவனம் ஈர்க்கும் மோஷன் போஸ்டர்

Published on 05/04/2022 | Edited on 12/04/2022

 

Vishnu Vishal teamed up with famous Telugu actor - Attractive Motion Poster

 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் நடிகர் 'விஷ்ணு விஷால்'. 'இன்று நேற்று நாளை', 'ராட்சசன்' படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். 'எஃப்.ஐ.ஆர்' பட வெற்றிக்கு பிறகு முரளி கார்த்திக் இயக்கத்தில் 'மோகன்தாஸ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் 'ரவி தேஜா' தயாரிக்கும் 'கட்டா குஸ்தி' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். செல்லா அய்யாவு இயக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தினுடைய டைட்டில் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குத்து சண்டை விளையாட்டை  மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது. ரவி தேஜா நிறுவனத்தோடு இணைந்து விஷ்ணு விஷாலும் இப்படத்தை தயாரிக்கிறார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
vishnu vishal new movie with arunraja kamaraj

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஒரு படமும், கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ஒரு படமும் தயாரித்து நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Next Story

மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
vishnu vishal once again joined with gatta kusthi movie director

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனை விஷ்ணு விஷாலே அவரது தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கிறார். 

இந்த நிலையில் தற்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பை அறிவித்துள்ளார். கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இது குறித்து பேசிய விஷ்ணு விஷால், “கட்டா குஸ்தி படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பு தான் எங்களை மீண்டும் இணைய வைத்துள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வரும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.