Skip to main content

ராட்சசன் பட இயக்குநருடன் ஹாட்ரிக் கூட்டணி - விஷ்ணு விஷால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

vishnu vishal ramkumar again joined for one movie produced by sathya jothi films

 

2014-ஆம் ஆண்டு வெளியான 'முண்டாசுப்பட்டி' படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகிற்கு அறிமுகமானவர் ராம்குமார். வித்தியாசமான கதையை காமெடி கலந்து சொல்லி முதல் படத்திலே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனை அடுத்து மீண்டும் விஷ்ணு விஷாலை வைத்து 'ராட்சசன்' படத்தை இயக்கினார். சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் விமர்சனம் மற்றும் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்பு சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமானார். பிறகு சில காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை.

 

இந்த நிலையில், ராம்குமார் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மீண்டும் மூன்றாவது முறையாக விஷ்ணு விஷாலை வைத்து படம் இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், விரைவில் படத்தை பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணியில் ஏற்கனவே வெளியான இரண்டு படங்களும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக அவர்கள் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதோடு, முதல் படத்தில் காமெடி, அடுத்த படத்தில் சைக்கோ த்ரில்லர் என படத்துக்குப் படம் வித்தியாசமான ஜானரை அணுகும் இக்கூட்டணி, இந்த முறை எந்த ஜானரில் படம் எடுக்கவுள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இப்போதிலிருந்தே எழத்தொடங்கியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
vishnu vishal new movie with arunraja kamaraj

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஒரு படமும், கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ஒரு படமும் தயாரித்து நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Next Story

மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
vishnu vishal once again joined with gatta kusthi movie director

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனை விஷ்ணு விஷாலே அவரது தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கிறார். 

இந்த நிலையில் தற்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பை அறிவித்துள்ளார். கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இது குறித்து பேசிய விஷ்ணு விஷால், “கட்டா குஸ்தி படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பு தான் எங்களை மீண்டும் இணைய வைத்துள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வரும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.