Published on 13/08/2022 | Edited on 13/08/2022

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி அதிதி ஷங்கர் மற்றும் பலர் நடித்த விருமன் திரைப்படம் நேற்று வெளியானது. சூர்யா தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து இருந்தார். குடும்ப பாங்கான கதை அம்சம் கொண்ட படமாதலால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை தூண்டியது. இந்நிலையில் நேற்று வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விருமன் புதிய சாதனையை படைத்துள்ளது.
கார்த்தி நடிப்பில் வெளியான படங்களில் விருமன் முதல் நாளில் 8.2கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது அவரது மற்ற படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம். இத்தகவலை அப்படத்தின் விநியோகஸ்தர் சக்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.