Skip to main content

ஆக்ஷனில் கலக்கும் விக்ரம் பிரபு - டீசரை வெளியிட்ட படக்குழு

Published on 27/06/2022 | Edited on 27/06/2022

 

vikram prabhu 'Paayum Oli Nee Yenakku' teaser released

 

விக்ரம் பிரபு, 'டாணாக்காரன்' படத்தைத் தொடர்ந்து 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'கார்த்திக் மூவி ஹவுஸ்' சார்பாக இப்படத்தை தயாரித்து இயக்குகிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் அத்வைத். இப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்கக் கன்னட நடிகர் தனஞ்சயா மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் மணி சர்மாவின் மகன் சாகர், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். கடந்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் 'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வசனங்கள் ஏதும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து வெளியாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.       

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்” - வாணி போஜன்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
vani bhojan about vijay political entry

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடந்து வருகிறது. இதனிடையே தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். மேலும் கடைசியாக தான் ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் எனத் தனது கட்சிக்குப் பெயர் வைத்துள்ளதாக சமீபத்தில் அறிவித்த விஜய், அதை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். 2024ல் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை வாணி போஜன் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்வி அவரிடம் கேட்ட நிலையில், “நல்லது நினைக்கும் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். செங்களம் சீரிஸ் நடிக்கிறப்போ ரொம்ப அழகாக இருந்தது. அந்த சமயத்தில் அரசியலில் இருக்க வேண்டும் என ஆசையாக இருந்தது. இப்பவும் இருக்கு. விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். அவர் என்ன பண்ணுகிறார் என்பதை பார்க்கலாம். எல்லாம் நம் கையில் தான் இருக்கு” என பதிலளித்தார். கடந்த வருடம் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் அரசியல் கதையான செங்களம் வெப் தொடரில் வாணி போஜன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

ஆதரவளித்த ரசிகர்களுக்கு ‘இறுகப்பற்று’ படக்குழு நன்றி

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

irugapatru thanks note for fans support

 

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த்,  ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நிஜமாகவே ஒரு நல்ல மருத்துவரின் கவுன்சிலிங்கை கேட்டுவிட்டு வந்தது போல இருந்ததாகவும், படம் நேர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் பல தம்பதிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தனர். 

 

திரையரங்கு வெற்றிக்குப் பிறகு நவம்பர் 6 முதல் பிரபல ஒடிடி தளமான நெட்ஃபிக்ஸில் இப்படம் ஸ்ட்ரீமிங் ஆனது. ஓடிடியிலும் பலரது கவனத்தை பெற்று டாப் 10 ட்ரெண்டிங் பட்டியலில் இறுகப்பற்று தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், பார்வையாளர்களின் ஆதரவிற்கு இறுகப்பற்று படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. இப்படம் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.