Skip to main content

கமல் ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த பர்த்டே ட்ரீட்

Published on 14/03/2022 | Edited on 14/03/2022

 

vikram movie release date announced

 

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளை நிறைவு செய்த படக்குழு, அடுத்தகட்ட பணியில் கவனம் செலுத்தி வருகிறது.

 

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'விக்ரம்' படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் படத்தின் மேக்கிங் வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. மிகப்பெரும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிவரும் இப்படத்தின் மேக்கிங் வீடியோ பலரது கவனத்தைப் பெற்றதோடு, வெளியான 2 மணி நேரத்தில் யூடியூப் தளத்தில் 5 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆக்ரோஷமும்... அன்பும்... - வெளியான விடுதலை 2 அப்டேட்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
vetrimaaran soori vijay sethupathi viduthalai 2 first look released

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது. 

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராஜ் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே கடந்த பிப்ரவரியில் நடந்த ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அப்போது பார்வையாளர்கள் 5 நிமிடங்கள் கைத்தட்டி படக்குழுவினரை பாராட்டினர்.   


இந்த நிலையில், விடுதலை பாகம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ள நிலையில் ஒன்றில் விஜய் சேதுபதியும் மஞ்சு வாரியரும் அன்பாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. மற்றொன்றில் ஆக்ரோஷமாக கையில் கத்தியுடன் விஜய் சேதுபதி மட்டும் இடம் பெறுகிறார். கதை நாயகனான சூரி இரண்டு போஸ்டரிலும் இடம் பெறவில்லை. முன்னதாக சூரியை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் தான் இரண்டாம் பாகத்தில் அதிகம் இடம் பெறும் என வெற்றிமாறன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போஸ்டரில் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

புதிய சாதனை படைத்த விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம்!

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Vijay Sethupathi's 'Maharaja' movie set a new box office record!

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படம், திரையரங்குகளில் ஓடி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. குறிப்பாக, இப்படத்தில் எடிட்டிங் பணிகளைச் செய்த பிலோமின் ராஜை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்தத் திரைப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியாகி 18 நாட்களைக் கடந்த நிலையில், இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. முன்னதாக இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை 4’ படம் ரூ.100 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.