vikram cobra movie release update out now

Advertisment

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தையும் முடித்துள்ள படக்குழு தற்போது இறுதிக் கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் அப்டேட்டைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கோப்ரா படம் வெளியாகும் தேதி நாளை(20.5.2022) மாலை6 மணிக்கு அறிவிக்கப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றநிலையில் தற்போதுபடத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.