/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/10_70.jpg)
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' படம் தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் விக்ரம் நடிப்பை பலரும் பாராட்டியிருந்தனர்.
இந்நிலையில் கோப்ரா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற 28ஆம் தேதி சோனி லீவ் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இதனை சோனி லீவ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ஒரு புதிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)