vijaysethupathi released Theeyavar Kulaigal Nadunga first look poster

Advertisment

தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாகிவருகிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அர்ஜுன் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். மன இறுக்கம் கொண்ட ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தை ஜி.எஸ். ஆர்ட்ஸ் சார்பில் ஜி. அருள் குமார் தயாரிக்கிறார்.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைநடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 'தீயவர் குலைகள் நடுங்க' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பின்புறம் குடை பிடித்துக் கொண்டு கோபத்துடன் நடிகர் அர்ஜுன் நிற்கிறார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.