vijay wishes rajini for speed recovery

ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே த.செ.ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது.

Advertisment

இந்த நிலையில் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதயத்தில் இருந்து பிரியும் பிரதான இரத்த நாளத்தில் அவருக்கு வீக்கம் இருந்ததாகவும் அதை அறுவை சிகிச்சை இல்லாமல் சரி செய்துவிட்டதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இன்னும் இரண்டு நாட்களில் ரஜினி வீடு திரும்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Advertisment

ரஜினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வெளியானதுமே அவர் பூரண குணமடைய அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நடிகரும் த.வெ.க. தலைவர் விஜய்யும் தனது கட்சியின் எக்ஸ் பக்கத்தில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வரும் ரஜினிகாந்த் சார் விரைவில் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று உளமார இறைவனை வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment