Skip to main content

"ஜி.எஸ்.டி. தெரியுமா"... இணையத்தில் ட்ரெண்டாகும் விஜய் சேதுபதி படத்தின் ட்ரைலர் 

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

vijay sethupathi's kadaisi vivasayi movie trailer goes viral

 

'காக்கா முட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். இப்படம் வெளியாகி தேசிய விருது பெற்றதோடு, உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு இயக்குநர் மணிகண்டனுக்கு பெருமை சேர்த்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இவர் இயக்கிய ‘ஆண்டவன் கட்டளை’ படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

 

இதையடுத்து, விஜய் சேதுபதி - மணிகண்டன் கூட்டணியில் 'கடைசி விவசாயி' என்ற படம் உருவாகிவருகிறது. இதில், யோகிபாபு, பசுபதி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஆண்டே படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டிவருகிறது. 

 

இந்நிலையில், ‘கடைசி விவசாயி’ படத்தின் ட்ரைலரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், விவசாயிகளின் வாழ்க்கையையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி மனநலம் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர், தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவருகிறது. மேலும், யூடியூப் தளத்தில் 8 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உயிரைக் கொடுக்கவும் எடுக்கவும் தயங்காத 'ஜவான்' - டிரைலர் வெளியீடு!

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Jawan | Official Tamil Trailer | Shah Rukh Khan | Atlee | Nayanthara | Vijay S | Deepika P | Anirudh

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

 

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வெளியானது. அதில் இப்படம் இந்தாண்டு ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்த நிலையில், அண்மையில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்தது. 

 

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை ரெட் சில்லீஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதைப் பார்க்கையில், பிரமாண்ட காட்சிகளோடும் ஆக்‌ஷன் நிறைந்த ரிவெஞ்ச் ட்ராமாவாக பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது. ஷாருக்கானின் ஹீரோயிசம், நயன்தாராவின் ஸ்டைலிஷ் தோற்றம், விஜய் சேதுபதியின் வில்லனிசம், எனப் படத்திற்கு ஆர்வம் தூண்டும் வகையில் இந்த டிரைலர் அமைந்துள்ளது. இந்த டிரைலர் தற்போது ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  

 

 

Next Story

'புறக்கணிக்கப்பட்ட படத்திற்கு தேசிய விருதா? ; அதிர்ச்சியளிக்கிறது' - முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்து

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

 'A national award for a neglected film?; Shocking'- CM Stalin's comment

 

2021 ஆம் ஆண்டிற்கான 69 ஆவது தேசிய  தேசிய விருதுகளை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த திரைப்படங்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கருவறை குறும்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறந்த கல்வி திரைப்படமாக இயக்குநர் பி.லெனினின் 'சிற்பிகளின் சிற்பங்கள்' தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடைசி விவசாயி படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படமாக கடைசி விவசாயி அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தேசிய ஒருமைப்பாட்டிற்கான படமாக 'காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கடைசி விவசாயி திரைப்படத்திற்கு விருது அளிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் 'காஷ்மீர் ஃபைல்ஸ்'  திரைப்படத்திற்கு விருது அளித்தது அதிர்ச்சியை தந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

 

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், '#69thNationalFilmAwards -இல் தமிழில் சிறந்த படமாகத் தேர்வாகியிருக்கும் #கடைசிவிவசாயி படக்குழுவினருக்கு என் பாராட்டுகள்! @VijaySethuOffl #Manikandan #நல்லாண்டி மேலும், #இரவின்நிழல் படத்தில் ‘மாயவா சாயவா’ பாடலுக்காகச் சிறந்த பின்னணிப் பாடகி விருதை வென்றுள்ள @shreyaghosha, #கருவறை ஆவணப்படத்துக்காகச் சிறப்புச் சான்றிதழ் வென்றுள்ள இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சிறந்த கல்வித் திரைப்படத்துக்கான பிரிவில் விருதுக்குத் தேர்வாகியுள்ள #சிற்பிகளின்சிற்பங்கள் படக்குழுவினர் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மறுபுறம், சர்ச்சைக்குரிய திரைப்படம் என நடுநிலையான திரைவிமர்சகர்களால் புறக்கணிக்கப்பட்ட திரைப்படத்துக்குத் தேசிய ஒருமைப்பாட்டுக்கான #NargisDutt விருது அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இலக்கியங்கள், திரைப்படங்களுக்கு அளிக்கும் விருதுகளில் அரசியல் சார்புத்தன்மை இல்லாமல் இருப்பதுதான் அந்த விருதுகளைக் காலங்கடந்தும் பெருமைக்குரியவையாக உயர்த்திப் பிடிக்கும். மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது' என தெரிவித்துள்ளார்.