
தென்னிந்திய மொழிகளைத் தாண்டி பாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அந்த வகையில், தமிழில் 'விடுதலை', தெலுங்கில் 'மைக்கேல்', இந்தியில் 'ஜவான்', 'மும்பைக்கார்', 'மெர்ரி கிறிஸ்துமஸ்' உள்ளிட்ட படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வருகின்றன. மேலும் ‘ஃபார்ஸி’ எனும் இந்தி இணையத்தொடரிலும் நடித்து முடித்துள்ளார். இத்தொடர் வரும் 10 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். நித்திலன் சுவாமிநாதன் விதார்த் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கினார். இதையடுத்து தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகவுள்ள இப்படத்திற்கு அஜ்னீஸ் லோக்நாத் என்பவர் இசையமைக்கிறார்.