vijay sethupathi in kamal 233 project

கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை முடித்துவிட்டு மணிரத்னம், மகேஷ் நாராயணன், பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளார். இதனிடையே அ.வினோத் அல்லது வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது.

Advertisment

இப்படி அவரது அடுத்த பட இயக்குநர்கள் லிஸ்டில் பல பேர் இருக்க அ.வினோத்துடன் இணையும் படம் தான் அடுத்து ஆரம்பிக்கவுள்ளதாகசமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் அத்தகவலை உறுதிப்படுத்தும் விதமாக கமலும் அ.வினோத்தும் ‘நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ அமைப்பின் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினர்.

Advertisment

இப்படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு தளத்தில் களமிறங்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இப்படம் கமலின் 233வது படமாக இருக்கும் என்றும் இப்படத்தை முடித்துவிட்டு ஏற்கனவே 234வது படத்துக்கு கமிட்டான மணிரத்னம் படம் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தை பற்றிய தகவல் வெளியாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகவும், அவரிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே கமலுடன் விஜய் சேதுபதி நடித்த 'விக்ரம்' படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.