Skip to main content

விஜய் பட இயக்குநருடன் கைகோர்க்கும் விஜய்சேதுபதி

Published on 07/12/2021 | Edited on 07/12/2021

 

vijay sethupathi joins to director al vijay next movie

 

தமிழ் சினிமாவில் மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா ஆகிய பல வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான ஏ.எல்.விஜய் கடைசியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தலைவி என்ற பெயரில் இயக்கியிருந்தார்.  பாலிவுட் நடிகை கங்கனா நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை அனுஷ்காவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

 

ad

 

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தில் கதாநாயகனுக்கு வலுவான கதாபாத்திரம் இருப்பதால் இயக்குநர் ஏ.எல் விஜய் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நடிகர் விஜய் சேதுபதி தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” - விஜய் சேதுபதி வெளியிட்ட டீசர் வைரல்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Soodhu Kavvum 2 First Look and Teaser released

திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூது கவ்வும்’. இதில் விஜய் சேதுபதி, அஷோக் செல்வன், பாபி சிம்ஹா, சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. 

இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது ‘சூது கவ்வும் 2: நாடும் நாட்டு மக்களும்’ என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயிண்மெண்ட், தங்கம் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயரித்துள்ளனர். மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க எம்.எஸ். அர்ஜுன் இயக்கியுள்ளார். கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. 

Soodhu Kavvum 2 First Look and Teaser released

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், அஷோக் செல்வன், உள்ளிட்ட சில பிரபலங்கள் அவர்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்கள். இப்படத்தில் மிர்ச்சி சிவா, கருணாகரனை தவிர்த்து ஹரிஷா, ராதா ரவி, எம்.எஸ். பாஸ்கர், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார்.

டீசரில் முதல் பாகத்தை போலவே கடத்தல், காமெடி, ஆக்‌ஷன் போன்ற அம்சங்கள் இதிலும் தொடர்கிறது. குறிப்பாக மிர்ச்சி சிவா பேசும், “பொண்ணுங்களோட கற்பனையில தான் நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது” என்ற வசனம் தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளது. படத்தின் இசை மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Next Story

“நிறைய மெசேஜ்கள் வருகிறது” - தெளிவுபடுத்திய அருண் விஜய்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
arun vijay about Mission Chapter 1 ott update

இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியான படம் ‘மிஷன் சாப்டர் 1’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி அப்டேட் குறித்து ரசிகர்கள் தன்னிடம் கேட்டு வருவதாக அருண் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்ட அவர், “மிஷன் சாப்டர் 1 பட ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து நிறைய மெசேஜ்கள் வருகிறது. லைகா நிறுவனத்திடம் கூறியிருக்கிறேன்.” என குறிப்பிட்ட அவர், ஒரு தனியார் தொலைக்காட்சி அதன் உரிமையை வாங்கியுள்ளதாகவும் அதனால் அவர்களிடமே ரசிகர்கள் கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

அருண் விஜய் தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.