/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/al_2.jpg)
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா ஆகிய பல வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான ஏ.எல்.விஜய் கடைசியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தலைவி என்ற பெயரில் இயக்கியிருந்தார். பாலிவுட் நடிகை கங்கனா நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைதொடர்ந்து நடிகை அனுஷ்காவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதி இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இப்படத்தில் கதாநாயகனுக்கு வலுவான கதாபாத்திரம் இருப்பதால்இயக்குநர் ஏ.எல் விஜய் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதிதற்போது இயக்குநர்லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தில் கமலுடன் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)