.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/53_48.jpg)
விஜய் சேதுபதி வில்லனாக நடித்த ஜவான் படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த இப்படம் ரூ.1000 கோடியை நெருங்கவுள்ளது. இதையடுத்து தற்போது மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரிலும் ஆறுமுககுமார் இயக்கத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார். மேலும் பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் சேதுபதி பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது பலராலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த லாபம் படம் தெலுங்கில் வெளியான நிலையில், தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி, க்ரித்தி ஷெட்டியுடன் டூயட் பாடி நடிக்க முடியாது எனக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கிறேன். அதற்கு கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க அவரது புகைப்படத்தை அனுப்பினர். இப்போதுதான் அவருக்கு அப்பாவாக நடித்தேன்.அதனால் அவருக்கு ஜோடியாக நடிக்க முடியாது என்றேன். ஆனால் அவர்கள் உப்பெனா படத்தை பார்க்கவில்லை. அதனால் நான் க்ரித்திக்கு அப்பாவாக நடித்தது அவர்களுக்கு தெரியாது.
மேலும் உப்பெனா பட க்ளைமாக்ஸ் காட்சியில், நான் க்ரித்தியிடம், எனக்கு 15 வயதில் ஒரு மகன் இருக்கிறார். நீங்களும் கிட்டத்தட்ட அந்த வயதில் இருப்பவர். அதனால் என்னை நிஜமாகவே உங்களின் தந்தையாக நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன். அப்படி சொல்லிவிட்டு எப்படி அவருடன் ரொமான்ட்டிக்காக நடிக்க முடியும். அதனால் எப்போதுமே அது நடக்காது" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)