Skip to main content

50 - 50; களம் காணும் தனுஷ் - விஜய் சேதுபதி!

Published on 05/06/2024 | Edited on 05/06/2024
vijay sethupathi 50 movie maharaja release update

விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெயின் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுகக்குமார் இயக்கத்தில் ‘ஏஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கிடையே மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடரில் நடித்து வந்தார். அது தற்போது கைவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மகாராஜா. விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். இவர்களோடு நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், மணிகண்டன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படத்திற்கு அஜ்னீஸ் லோக்நாத் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் 2024-இன் ‘இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் லாஸ் ஏஞ்சல்ஸ்’ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்த விழா ஜூன் 27 முதல் ஜூன் 30 வரை மொத்தம் மூன்று நாட்கள் நடக்கிறது. 

இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் வெளியான ட்ரைலரில் குறிப்பிட்ட நிலையில் படம் குறித்து சில தினங்களுக்கு முன்பு பேசிய இயக்குநர் நித்திலன் சாமிநாதன், ஜூன் 14ஆம் தேதி வெளியாக திட்டமிடப்பட்டிருப்பதாக சொல்லியிருந்தார். இந்த நிலையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஜூன் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

vijay sethupathi 50 movie maharaja release update

இதனிடையே ஜூன் 13ஆம் தேதி தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படமும் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தனுஷோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. ட்ரைலர் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் முன்னணி நடிகர்களின் 50 வது படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளதாக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

குலதெய்வ கோயிலில் தனுஷ் சிறப்பு வழிபாடு

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
dhanush visit temple for raayan success

தனுஷ், தற்போது தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அடங்காத அசுரன்’ எனும் பாடல் கடந்த மே 9ஆம் தேதி வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர். இதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடிய ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியானது. கானா காதர் எழுதியுள்ள இப்பாடல் கானா ஸ்டைலில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. 
 
இப்படம் வருகிற ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனால் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. தெலுங்கிலும் புரொமோஷன் தொடர்கிறது. அண்மையில் அங்கு புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதில் பேசும் தனுஷ் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ராயன் படம் வெற்றி பெறவேண்டி, தனது குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார். தேனியில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரத்தில் ஸ்ரீகஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோயிலில் தனது இரண்டு மகன்களுடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவரைப் பார்த்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்பு தனுஷ், தேவாரம் அருகிலுள்ள தனது தாயார் வழி குலதெய்வ கோயிலான சங்கராபுரம் கருப்பசாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.

Next Story

“விஜய் கூறிய விவரங்கள் நெகிழவைத்து” - நித்திலன் சாமிநாதன்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
nithilan saminathan about vijay praised his maharaja movie

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது. 

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் நிலையில் 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நித்திலன் சாமிநாதன், “டியர் விஜய் அண்ணா, இந்த சந்திப்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு பெருமையாக உணர்கிறேன். மகாராஜாவைப் பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னைப் நெகிழவைத்தது. அது எனக்கு பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. லவ் யூ ணா” என பதிவிட்டுள்ளார்.