Skip to main content

“என்னை கேட்காம கை வச்சிட்டாங்க” - புலம்பும் இயக்குநர் விஜய் மில்டன்

Published on 02/08/2024 | Edited on 02/08/2024
vijay milton vijay antony mazhai pidikaatha manithan movie 1 minute video issue

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. மேலும் பிரபல கன்னட நடிகர் தனஞ்செயா, பிரித்வி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடலுக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்க, அச்சு ராஜாமணி பின்னணி இசையைக் கவனித்துள்ளார். இப்படம் இன்று (02.08.2024) முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

vijay milton vijay antony mazhai pidikaatha manithan movie 1 minute video issue

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் விஜய் மில்டன், படத்தில் ஆரம்பத்தில் வரும் ஒரு நிமிட வீடியோ தனக்குத் தெரியாமல் இணைத்துவிட்டார்கள் என்றும் அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசி வெளியிட்ட வீடியோவில், “பொதுவாக படம் ரிலீஸ் ஆகும் தேதியில், வெளியூர் சென்றுவிடுவேன். ஆனால் இப்படத்தை பத்திரிக்கையாளர்களோடு பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இந்த படத்தில் ஹீரோ யார்?, அவன் எங்கியிருந்து வந்திருக்கிறான், அவன் ரௌடியா, அடி ஆளா, டாக்டரா என்ற கேள்வியை முன்வைத்துத் தான் இந்த கதையை பண்ணியிருந்தேன். அதாவது மர்மமான முறையில் ஒருவன் வருகிறான், அவனுக்கு அடிப்பட்டிருக்கு, அந்த அடி ஏன் பட்டிருக்கு, அவன் பின்னாடி யார் இருக்கா, அவன் கூட வர சரத்குமார் யாரு, இவனுக்குப் பின்னாடி என்ன கதை இருக்கு என நிறையக் கேள்விகளைக் கொண்டு இந்த படத்தின் ஸ்கிரிப்ட் எழுதியிருந்தேன்.  

ஆனால் படம் பார்க்கும் போது எனக்கே ஷாக்காகி விட்டது. பட ஆரம்பத்தில் ஒரு நிமிடத்திற்கு ஒரு ஃபுட்டேஜ் இருக்கிறது. அதை நான் வைக்கவில்லை. அது எப்படி வந்தது என்றும் எனக்குத் தெரியவில்லை. அந்த 1 நிமிட வீடியோவில் ஹீரோ யார், எங்கிருந்து வருகிறான், அவனுக்குப் பின்னால் யார் இருக்கிறார் என எல்லாத்தையுமே சொல்லிவிடுகிறார்கள். இப்படி செய்தால் எப்படி அந்த படத்தைப் பார்க்க முடியும். இதற்காகவா இவ்ளோ கஷ்டப்பட்டு எடுத்தோம். சென்சார் பண்ண படத்தில் ஒரு நிமிட வீடியோவை சேர்க்கும் உரிமையை யார் கொடுத்தார்கள்  எனத் தெரியவில்லை. இயக்குநரைக் கேட்காமல் இது நடந்திருக்கிறது. உங்களிடம் நான் ஒரு கோரிக்கை வைத்துக்கொள்கிறேன். தயவு செய்து அந்த ஒரு நிமிட வீடியோவை மறந்துவிட்டு இந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயம் உங்களை ரசிக்க வைக்கும்” என்றார். இது தற்போது கோலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பிருக்கிறது.

சார்ந்த செய்திகள்