Skip to main content

‘லியோ’ - பட்டைத் தீட்டும் விஜய்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

vijay leo tamil poster released

 

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இசை வெளியீட்டு விழா வருகிற 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.  

 

படத்தின் முதல் பாடலான 'நா ரெடி...' பாடல், சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ என அவ்வப்போது அப்டேட்டுகள் வந்து கொண்டே இருந்த நிலையில், கடந்த சில தினங்களாகப் படத்தின் போஸ்டர்கள் வந்து கொண்டே இருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் ஒவ்வொரு மொழியின் போஸ்டர்களை வெளியிட்டு வந்தது. 

 

அந்த வகையில் தெலுங்கு, கன்னட போஸ்டர்களை அடுத்து தற்போது தமிழ் மொழியின் போஸ்டர். இந்த போஸ்டரை பார்க்கையில் வில்லன்களைப் பழி வாங்க விஜய் கத்தியைப் பட்டைத் தீட்டுவது போல் அமைந்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்தி போஸ்டர் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்