vijay

Advertisment

தெறி, மெர்சல் படங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அட்லி விஜய் கூட்டணியில் உருவான படம் பிகில். ஏ.ஜி.எஸ்.நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்தார். மெர்சல் படத்தை ஒளிப்பதிவு செய்த ஜி.கே. விஷ்ணுதான் இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தார்.

விஜய்யுடன் நயன்தாரா, டேனியல் பாலாஜி, இந்துஜா, கதிர், ஜாக்கி ஷெராஃப், வர்ஷா பொல்லாமா, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் விஜய் வயதான கெட்டப், இளம் கெட்டப் என்று இரு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 2019ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி வெளியானது. இந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்தப் படம் முழுக்க கால்பந்தாட்டம் சம்மந்தப்பட்டது என்பதால், இரண்டாம் பாதியில் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டிகள் பெரும்பாலும் பல கோடி செலவில் வி.எஃப்.எக்ஸ் முறையில் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இப்படத்தின் வீடியோ எஃபக்ட்ஸ் மேக்கிங் வீடியோ வெளியாகி, வைரலாகி வருகிறது.

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/9q3h4fy-3iw.jpg?itok=ohCSE7Qs","video_url":" Video (Responsive, autoplaying)."]}