vijay antony raththam movie new promo

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரத்தம்' . இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்பினிடிவ் ஃபிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். இப்படம் கடந்த மாதம்28 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தள்ளிவருகிற 6 ஆம் தேதி வெளியாகிறது. இதனால் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு.

Advertisment

அந்த வகையில் தற்போது ஒரு ப்ரோமோ வீடியோவை இயக்குநர் அமுதன் வெளியிட்டுள்ளார். அதில் விஜய் ஆண்டனி ரத்தம் பட கெட்டப்புடன் மழையில் நடந்து செல்கிறார். அப்போது சதீஷ், தமிழ் படம் 2 பட கெட்டப்பில் விஜய் ஆண்டனியை இடித்து விடுகிறார். பின்பு அமுதன் சினிமேட்டிக் யூனிவர்ஸ் இருப்பதாகவும் அதற்காக வந்ததாகவும் கூறுகிறார். இந்த ப்ரோமோஷன் வீடியோ தற்போது பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisment

அமுதன், கடந்த 2018 ஆம் ஆண்டு சிவா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ் படம் 2 எடுத்தார் என்பது நினைவுகூரத்தக்கது.