Skip to main content

திடீர் விசிட் - யாசகர்களை நெகிழ வைத்த விஜய் ஆண்டனி

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

vijay antony meets beggers

 

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் இப்படம் 5 நாளில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கிலும் வெளியான இப்படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து இயக்கி இசையமைத்து அதில் நடித்தும் உள்ளார். மேலும் காவ்யா, ராதா ரவி, மன்சூர் அலி கான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் திருப்பதிக்குச் சென்ற விஜய் ஆண்டனி அங்குள்ள யாசகர்களைச் சந்தித்தார். அவர்களுக்கு போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார். மேலும்  அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓட்டு தான் நம் வலிமையான ஆயுதம்” - விஜய் ஆண்டனி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
vijay antony about election 2024

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ள நிலையில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் தனசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் லவ் குரு என்ற தலைப்பில் திரைக்கு வருகிறது. இப்படம் ரம்ஜானுக்கு வெளியாகவுள்ளது. 

இதனால் படக்குழு புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவை, சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களிலும் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சி குறித்த ஆலோசனையும், ரோமியோ படம் தொடர்பாகவும் கோவையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, தேர்தல் குறித்தான செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், “எல்லாரும் ஓட்டு போடுங்க. ஓட்டு போடாம இருக்காதீங்க. நோட்டாவிற்கு போடாதீங்க. பெஸ்ட்-னு யாராவது இருப்பது போல வேஸ்ட்-னும் யாராவது இருப்பாங்க. அதில் யாராவையாவது தேர்ந்தெடுங்க. ஓட்டை வீணடித்து விடாதீங்க. ஓட்டு தான் நம் கைகளில் இருக்கக்கூடிய வலிமையான ஆயுதம். அதை மிஸ் பண்ணிட்டு குறை சொல்லக் கூடாது.

ஓட்டு போடுவதற்கு முன்னாடி யாருக்கு வாக்களிக்க வேண்டும், அவர் என்ன பண்ணார் என யோசித்து ஓட்டு போடுங்கள். அரை மணி நேரமாவது யோசியுங்கள். பாதி பேர் நேரா போய் குத்திட்டு வந்துடுறாங்க. பிடித்தவங்களுக்கு ஓட்டு போடுறாங்க. அப்பாவாக இருக்கட்டும் அம்மாவாக இருக்கட்டும், நாட்டுக்கு என்ன பண்ணாங்க, நல்லது பண்ண அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு என யோசிங்க” என்றார். 

Next Story

மனைவி மீது ஒரு தலைக் காதல் - விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Vijay Antony Mirnalini Ravi Romeo trailer released

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ரோமியோ. விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் தனசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியானது. அதில் முதல் இரவு காட்சியில் விஜய் ஆண்டனி கையில் சொம்பும் மிருணாளினி ரவி கையில் மதுவும் வைத்திருந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் லவ் குரு என்ற தலைப்பில் திரைக்கு வருகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது, விஜய் ஆண்டனியிடம், படத்தின் போஸ்டரில் கதாநாயகியின் கையில் மது இருப்பது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “ரொம்ப நாளாகவே குடி என்பது நம்ம ஊரில் இருக்கிறது. முன்பு சாராயம், திராட்சை ரசம் என்ற பெயரில் குடிச்சிட்டு இருந்தோம். இப்போ பார்களில் குடிக்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னாடியே ஜீசஸ் கூட குடிச்சிருக்கார்” என கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து பொதுவெளியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் இல்லையெனில், அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமெனவும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். 

பின்பு இது தொடர்பாக விளக்கமளித்த விஜய் ஆண்டனி, “நான் பேசியதை இணைத்து தவறாக அர்த்தப்படுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி  இருவருக்கும் கல்யாணம் நடந்த பிறகு மிருணாளினி ரவியை ஒரு தலையாக காதலிக்க முடிவெடுக்கிறார் விஜய் ஆண்டனி. அதற்காக என்ன திட்டம் தீட்டுகிறார், அவரது முடிவு நிறைவேறியதா? என்பதை விரிவாக காமெடி கலந்த ஒரு காதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.