/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/88_51.jpg)
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி அனைத்துத் தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் ‘பிச்சைக்காரன்’. இப்படத்திற்கு கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வரும் இப்படம் 5 நாளில் ரூ.22 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. தெலுங்கிலும் வெளியான இப்படம் அங்கு நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துஇயக்கிஇசையமைத்து அதில் நடித்தும் உள்ளார். மேலும் காவ்யா, ராதா ரவி, மன்சூர் அலி கான், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த நிலையில் திருப்பதிக்குச் சென்றவிஜய் ஆண்டனி அங்குள்ளயாசகர்களைச் சந்தித்தார். அவர்களுக்கு போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினார். மேலும் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)