Skip to main content

"விஜய் பாராட்டினார்" - பிரபல நடிகர் நெகிழ்ச்சி

 

vijay about sudeep kishen trailer

 

லோகேஷ் கனகராஜ் வழங்க 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' நிறுவனம் தயாரித்துள்ள புதிய படம் 'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படம் நாளை (03.02.2023) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இந்த நிலையில்,  சந்தீப் கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் 'மைக்கேல்' பட ட்ரைலர் குறித்து விஜய் பாராட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "மைக்கேலுக்கு உங்கள் அன்பான வார்த்தைகள், அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி அண்ணா. மிகவும் பணிவாகவும் ஊக்கமளிப்பதாகவும் இருந்ததற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.  

 

தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் 'சந்தீப் கிஷன்'. தமிழில் 'யாருடா மகேஷ்' படத்தில் அறிமுகமாகி 'மாநகரம்' படத்தின் மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' மற்றும் 'மாயவன்' ஆகிய படங்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

சார்ந்த செய்திகள்