சிம்புவின் 'போடா போடி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், கடைசியாக விஜய் சேதுபதியை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை எடுத்தார். பின்பு கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவை கரம் பிடித்தார்.
இதையடுத்து அஜித்தின் 62வது படத்தை லைகா தயாரிப்பில் இயக்க கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் அஜித்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் ஆக்ஷன் ஜானரில் விக்னேஷ் சிவன் கதையை ரெடி பண்ணியுள்ளதாகவும் இந்த கதையை தற்போது விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனுக்கு ஓகே சொல்லும் பட்சத்தில் அவருடன் மூன்றாவது முறையாகப் பணியாற்ற உள்ளார்.
முன்னதாக 'நானும் ரௌடி தான்' மற்றும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' உள்ளிட்ட படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.