Skip to main content

வெற்றிமாறனின் 'விடுதலை'; ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

vetrimaaran viduthalai release date announced

 

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விடுதலை'. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக இப்படம் வெளியாகவுள்ள நிலையில், முதல் பாகத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 

 

இந்த நிலையில் 'விடுதலை பாகம் 1' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 31 ஆம் தேதி (31.03.2023) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.

 

இதனிடையே வருகிற 31 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வந்தது. பின்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. நீண்ட காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் ரிலீஸ் தேதி வெளியானதால் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.