Skip to main content

நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவளித்த மதுரை எம்.பி

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Venkatesan mp supports sidharth for airport hindi issue

 

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோவாக இருந்து வரும் சித்தார்த் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், அவ்வப்போது சமூகப் பிரச்சனைகள் குறித்தும் தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார். 

 

அந்த வகையில் மதுரை விமான நிலையத்தில் தனது வயதான பெற்றோரை இந்தியில் பேசச் சொல்லி 'சிஆர்பிஎப்’ (CRPF) அதிகாரிகள் வற்புறுத்தியதாகத் தனது சமூக வலைத்தளத்தில் சித்தார்த் குற்றம் சாட்டியிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த பதிவில், "மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம். அவர்கள் வயதான என் பெற்றோரிடம் பையிலிருக்கும் நாணயங்களை வெளியே எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள். அவர்கள் இந்தியில் தொடர்ந்து எங்களிடம் பேசியதால் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொன்னேன். ஆனாலும் இந்தியில் பேசியபடியே இருந்ததற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் எனத் திமிராகப் பதிலளித்தார்கள்" எனக் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் சித்தார்த்துக்கு ஆதரவாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "மதுரை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் பணியாளர்கள் நடிகர் சித்தார்த்திடம் இந்தியில் பேசச் சொல்லி வற்புறுத்தியதாகவும் அவரிடம் முறைகேடாக நடந்து கொண்டதாகவும் சித்தார்த் கூறியது குறித்து உரிய அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிதி ராவுடன் திருமணமா? - புகைப்படத்துடன் தெளிவுபடுத்திய சித்தார்த்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
siddharth calrifies on his marrige news to aditi rao

நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே காற்று வெளியிடை மூலமாக அறிமுகமாகி செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகை அதிதி ராவ்வை சித்தார்த் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் வெளிப்படையாக காதலை இதுவரை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில், இருவரும் நேற்று தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் சித்தார்த் - அதிதி ராவ் தரப்பு எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்தது.  

siddharth calrifies on his marrige news to aditi rao

இந்த நிலையில் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அதிதி ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, “அவள் ஒப்புக்கொண்டாள். நிச்சயதார்த்தம் நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். அதனால் இருவருக்கும் நிச்சயம் முடிக்கப்பட்ட நிலையில் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை அவர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சித்தார்த், 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு 2007ல் விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதிதி ராவும் சத்யதீப் மிஸ்ரா என்ற பாலிவுட் நடிகரை திருமணம் செய்துகொண்டு 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

திருமணம் செய்து கொண்ட சித்தார்த் - அதிதி ராவ்?

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
siddharth aditi rao marriage

நடிகர், தயாரிப்பாளர் என இரண்டு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் சித்தார்த். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சித்தா படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே காற்று வெளியிடை மூலமாக அறிமுகமாகி செக்க சிவந்த வானம், சைக்கோ உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான நடிகை அதிதி ராவ்வை சித்தார்த் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் 2021 ஆம் ஆண்டு மகா சமுத்திரம் எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 

இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு பேரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து வந்தனர். ஆனால் வெளிப்படையாக காதலை இதுவரை அறிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில், இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று தெலங்கானாவில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக ஸ்வாமி கோயிலில் இவர்களது திருமணம் நடந்து முடிந்ததாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் தரப்பில் எந்த அறிவிப்பும் வெளியிடாத சூழலில் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்தார்த் 2003 ஆம் ஆண்டு மேக்னா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு 2007ல் விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதிதி ராவ்வும் சத்யதீப் மிஸ்ரா என்ற பாலிவுட் நடிகரை திருமணம் செய்துகொண்டு 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.