venkat prabhu kiding director cs amudhan

மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியான தமிழ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சி.எஸ் அமுதன் இரண்டாவது படமாக, தமிழ் படம் 2.0 படத்தை இயக்கினார். இவர் தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ரத்தம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இயக்குநர் சி.எஸ் அமுதன் நேற்று தனது பிறந்தநாளை இயக்குநர்கள் பா.ரஞ்சித், மோகன் ராஜா தயாரிப்பாளர்கள் தனஜெயன் உள்ளிட்ட திரை பிரபலங்களுடன் கேக் வெட்டி கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் சமூக வலைத்தளத்தின் மூலம் இயக்குநர் சி.எஸ் அமுதனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisment

அந்த வகையில் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குநர் வெங்கட் பிரபு, "உன்னுடைய முதல் புதிய படத்தைப் பார்க்க காத்திருக்கிறேன்" என்று கிண்டலாகப் பதிவிட்டிருந்தார். இதற்கு, பதிலளித்த சி.எஸ் அமுதன் "நானும் கூட உங்களின் புதிய படத்தைக் கதையுடன் பார்க்க காத்திருக்கிறேன்" என்று பதிலுக்கு அவரும் கிண்டலடித்துள்ளார். இதற்கு வெங்கட் பிரபு "வச்சுக்கிட்டா வஞ்சகம் பண்றோம்" என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.