/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/67_35.jpg)
இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து வருகிறார்.இவர்கள்கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதுரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.இப்படத்தில் கதாநாயகிகளாககயாடு லோகர் மற்றும்சித்தி இட்னானி இருவரும் நடிக்கின்றனர்.வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்குஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை, நடிகர்சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் புல்லட்டில் செம ஸ்டெயிலாகநடிகர் சிம்பு தோன்றியுள்ளார். இதேபோல படத்தின் இயக்குநர் கெளதம் மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் கையில் க்ளாப் போர்டுடன் அமர்த்திற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)