Vendhu Thanindhathu Kaadu shooting Wrap

மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு 'வெந்து தணிந்தது காடு', பத்து தல ஆகிய படங்களில்நடித்து வருகிறார். இதில் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்குநர்கெளதம் மேனன் இயக்கி வருகிறார்.இவர்கள்கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளதுரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Advertisment

'வெந்து தணிந்தது காடு' படத்தில் கதாநாயகிகளாககயாடு லோகர் மற்றும்சித்தி இட்னானி நடிக்கின்றனர்.வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்குஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, மும்பை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும்நிறைவடைந்துள்ளன.

இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பைவெளியிட்ட நடிகர் சிம்பு, படத்தின் புதிய போஸ்டரையும்தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் போஸ்டர் தற்போதுசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment