vishal

Advertisment

அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘வீரமே வாகை சூடும்’. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி நடிக்க, வில்லனாக பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் நடிக்கிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட நிலையில், மிகக்குறுகிய காலத்திலேயே படத்தின் மொத்த படப்பிடிப்பையும் படக்குழு நிறைவுசெய்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட டப்பிங் பணிகளும் தற்போது நிறைவுபெற்றுவிட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் படத்தைத் திரைக்கு கொண்டுவரும் திட்டத்தில் உள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்டப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்புகள் படக்குழு தரப்பிலிருந்து விரைவில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.