Skip to main content

முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வசந்த பாலன்

Published on 22/08/2023 | Edited on 22/08/2023

 

vasantha balan meets cm stalin

 

ஸ்விக்கி, சொமேட்டோ தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பை இயக்குநர் வசந்த பாலன் வரவேற்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். 

 

அந்த வீடியோவில், "சமீபத்தில் வெளியான என்னுடைய அநீதி படத்தில் உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களின் வலியை, வேதனையை சங்கம் அமைக்க முடியாத அவர்களின் ஊதிய பிரச்சினையை ஆழமாக நான் பதிவு செய்திருக்கிறேன். உணவு விநியோகிக்கும் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படுவதாக அறிவித்த முதல்வருக்கு நன்றி" எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் வசந்த பாலன்.  

 

அநீதி படம் கடந்த ஜூலை 21ஆம் தேதி வெளியானது. இதில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடத்தியிருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“அந்த கதாபாத்திரமாகத் தோற்றமளிக்கிறார்கள்” - வசந்த பாலன் பாராட்டு

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vasantha balan praised gv kalvan movie

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. ட்ரைலரை பார்க்கையில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது. இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடந்து முடிந்த நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இயக்குநர் வசந்த பாலன் படக்குழுவை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “நேற்று கள்வன் திரைப்படம் பார்த்தேன். இரண்டு திருடர்களின் வாழ்வில் பாரதிராஜா சாரும் யானையும் நுழையும் போது என்னாகிறது? என்கிற கதையில் கிராமம், அசலான கிராமத்து மனிதர்கள் என திரைப்படம் சுவாரஸ்யமாக நகர்கிறது. ஜி.வி பிரகாஷும் பாரதிராஜா சாரும் அந்த கதாபாத்திரமாக தோற்றமளிக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

vasantha balan praised gv kalvan movie

ஆர்யா, “டார்லிங் ஜி.வி ப்ரகாஷ் நடித்துள்ள கள்வன் படம் சுவாரசியமான பின்னணியில் ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. எமோஷ்னலாக பெரிதளவு கனெக்ட் ஆகிறது. பாரதிராஜா சார் அற்புதமாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷுடன் அவரின் கெமிஸ்ட்ரி ரசிக்கும்படியாக இருக்கிறது. நெகட்டிவ் ஷேடில் ஜி.வி பிரகாஷ் நடித்திருப்பது எதிர்பாராத ஒன்று. அதை சரியாக பண்ணியுள்ளார்” என எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

ஐஸ்வர்யா ராஜேஷ்,அவரது எக்ஸ் பக்கத்தில் “கள்வன் ஒரு யதார்த்தமான த்ரில்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களை சுவாரஸ்யமாக்கும். ஜி.வி பிரகாஷ் மீண்டும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக யானையோடு அவர் துரத்தும் காட்சி சிறப்பாக உள்ளது” எனக் குறிப்பிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.