dhruv

Advertisment

நாச்சியார் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா அடுத்து இயக்கும் படம் வர்மா. தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி ரீமேக்கான இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தின் வசனங்களை பிரபல எழுத்தாளும், சினிமா இயக்குநருமான ராஜூ முருகன் எழுதுகிறார். 'வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று நேபாளத்தில் துவங்கியது. மேலும் கதாநாயகி இன்னும் தேர்வு செய்யப்படாததால் துருவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டும் முதலில் படமாக்கப்பட்டது.