vadivelu video goes viral social media

90 களில் தொடங்கி தற்போது வரை தனது நகைச்சுவையாலும், நடிப்பாலும், தனக்கு உரித்த பாடி லாங்வேஜ்யை கொண்டுதிரைத்துறையில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. முன்னணி நடிகர்களுக்காகவேபடம் ஓடிய காலகட்டத்தில், காமெடி நடிகனுக்காகவும் படம் வெற்றிகரமாக ஓடிய வெகு சிலரில்வடிவேலும் ஒருவர். கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்தேவிலகியிருந்த வடிவேலு தற்போது மீண்டும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில்தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ், சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

Advertisment

இந்நிலையில் நடிகர் வடிவேலு ஜாலியாகபாட்டுப்பாடி நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பலரின்கவனத்தை பெற்றுள்ளது. தனியார் கல்லூரில்நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற வடிவேலு மாணவர்கள் மத்தியில், எட்டணா இருந்தா.. எட்டூறும் என் பாட்ட கேட்கும்... என்ற பாடலை தன்னுடையபாடி லாங்க்வேஜில்பாடி அசத்தினார். அதனைதொடர்ந்து தன்னுடையட்ரேட் மார்க் காமெடிகளைஒவ்வொன்றாக மாணவர்கள் மத்தியில் பேசி, வழக்கம் போல பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளார். இதனைஅங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

Advertisment