/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/154_35.jpg)
2021ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றார் உதயநிதி ஸ்டாலின். இதையடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரருக்கு துணை முதலமைச்சர் பதவி ஒதுக்கப்படவுள்ளதாக சமீபகாலமாக பேச்சுகள் இருந்து வந்தது.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு கடந்த மாத 29ஆம் தேதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். இதையடுத்து அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் என அனைவரும் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே திரைப் பிரபலங்களும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அருண் விஜய், சந்தானம், விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், அருள்நிதி, கெளதம் கார்த்தி, மஞ்சிமா மோகன், சிபி சத்யராஜ், பிரதீப் ரங்கநாதன், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் எக்ஸ் வலைதளத்தில் வாழ்த்தி இருந்தனர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் துணை முதலமைச்சர் உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். அதே போல் வடிவேலும் துணை முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)