Skip to main content

ஆஞ்சநேயருக்கு காலி இருக்கை; ‘ஆதிபுருஷ்’ படக்குழு அறிவிப்பு

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

  Vacant seat for Anjaneya; 'Adhipurush' film crew announcement

 

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், க்ரீத்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்தது. 

 

இது தொடர்பாக மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு சத்யேந்திர தாஸ், உத்தரப் பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கண்டனம் தெரிவித்திருந்தனர். 

 

இந்நிலையில் ‘ஆதிபுருஷ்’ படம் திரையரங்கில் திரையிடும்போது ஒவ்வொரு காட்சியிலும் திரையரங்கின் ஒரு இருக்கையை ஆஞ்சநேயருக்காக காலியாக விடப் போவதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது சம்பந்தமான படத் தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், "அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமாக விளங்கும் அனுமனுக்கு மிகுந்த மரியாதையுடன் கூடிய பணிவான அஞ்சலி. ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு தியேட்டரிலும் ஒரு இருக்கையை ஒதுக்குகிறோம்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமிதாப் பச்சனுக்கு காங்கிரஸ் நோட்டிஸ்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Kalki 2898 AD: Legal notice served to amitabh bachan for allegedly hurting Hindu sentiments

இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

பிரம்மாண்டமாகவும், ஏராளமான பொருட்செலவிலும் எடுக்கப்பட்ட இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மகாபாரத குருசேத்திர போருக்கு பிறகு மகாபாரத கதாபாத்திரமான அஸ்வத்தாமன் எதற்காக உயிரோடு இருக்கிறார் என்பது பற்றியும், கலிகாலம் தொடங்கி 6000 வருடங்களுக்குப் பிறகும் உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும், கல்கி முதல் பாகத்தில் கதையாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.1000 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக தெரிவித்து இயக்குநர் நாக் அஸ்வின், பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மடாதிபதி ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணம் என்பவர் நோட்டிஸ் அனுப்பியுள்ள நிலையில், “இந்தியா என்பது உணர்வுகள், நம்பிக்கை மற்றும் பக்தி நிறைந்த நாடு. சனாதான தர்மத்தின் மதிப்புகளை சிதைக்கக் கூடாது. அதன் வேதங்களை மாற்றக்கூடாது. கல்கி நாராயணன் நம் நம்பிக்கையின் மையத்தில் இருக்கிறார். இவர் விஷ்ணுவின் இறுதி அவதாரமாகக் கருதப்படுகிறார்.

புராணங்களில் கல்கியின் அவதாரம் பற்றி அதிகம் எழுதப்பட்டுள்ளது, அதன் அடிப்படையில் பிரதமர் மோடி பிப்ரவரி 19 அன்று ஸ்ரீ கல்கி தாமுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த படம் நமது வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக இருக்கிறது. இந்தப் படம் நமது மத உணர்வுகளைப் புண்படுத்துகிறது. எனவே, நாங்கள் சில ஆட்சேபனைகளைக் குறிப்பிட்டுள்ளோம் மற்றும் பதிலுக்காக காத்திருக்கிறோம். இந்துக்களின் உணர்வுகளோடு விளையாடுவது சினிமாக்காரர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகிவிட்டது. துறவிகள் பேய்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்பது எங்கள் நம்பிக்கையுடன் விளையாடலாம் என்று அர்த்தமல்ல” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்த ப்ளாக் பஸ்டர்கள்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Back to Back blockbusters from Prabhas

இந்தியாவின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை கொண்டாடிடும் வகையில், இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் ஒன்றிணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘கல்கி 2898 ஏ டி’. இந்தத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 

பிரம்மாண்டமானதாகவும், ஏராளமான பொருட்செலவிலும் அனைத்து தரப்பு ரசிகர்களைக் கவரும் வகையிலும் தயாராகி இருக்கிறது. ரசிகர்களுக்கு திரையரங்க அனுபவத்தை வித்தியாசமாக வழங்குவதற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இத்திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்நிலையில், பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப்படமாக இப்படம் அமைந்திருக்கிறது. பிரம்மாண்ட படங்களின் நாயகன் பிரபாஸ் நடித்திருந்ததாலேயே அவரது ரசிகர்களுக்கு இப்படம் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இது போன்ற சிறப்பம்சங்கள் உள்ளதால் ‘கல்கி 2898 ஏடி’ திரையரங்கில் மிகுந்த எதிர்பார்ப்போடு வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஓப்பனிங்க் படமாக மாறியிருக்கிறது. இத்திரைப்படத்தை ரசிகர்கள் திருவிழாவைப் போல கொண்டாடி வருவதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.