/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/268_8.jpg)
சென்னை பெருநகர காவல்துறை ஒருங்கிணைத்த போதைப்பொருள் பழக்கத்திற்குஎதிராக சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவணத்திரைப்படப் போட்டி (Drive against Drugs) நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பலரின் குறும்படங்கள் பங்கேற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா இன்று நடைபெற்றது. விக்னேஷ் சிவன் தலைமையில் ஒரு குழு வெற்றியாளர்களைத்தேர்வு செய்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் கலந்துகொண்டு பேசினர். மேலும் உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது உதயநிதி பேசுகையில், "விக்னேஷ் சிவன் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். சமீப காலமாக எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொள்வதில்லை. என்னுடைய ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் இருந்து வெளியில் வந்துட்டேன். கடந்த வருடம் நடந்த செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை உலகமே வியந்து பாராட்டியது. அதனைத்தொகுத்து வழங்கியது விக்னேஷ் சிவன் தான். ஆனால் காவல்துறை சம்பந்தமான இந்த நிகழ்ச்சிக்கு எப்படி அவரை தேர்வு செய்தாங்க என்று தெரியவில்லை. அவருடைய படங்களின் பெயர் நானும் ரௌடி தான், காத்து வாக்குல ரெண்டு காதல். ஆனால் அவர் எடுக்கிற ஒவ்வொரு நிகழ்ச்சியும் முயற்சியும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
நாம் திரையில் சிங்கம் 1, 2, 3, சாமி 1, 2, என போலீஸ் படங்களை பார்த்திருப்போம். உண்மையாகவே காவல்துறை அதிகாரிகள்தமிழ்நாட்டை காக்கின்ற சிங்கங்களாகவும் சாமிகளாகவும் திகழ்கின்றனர். நாம் வாழ்கின்ற யுகம் வாட்ஸ் ஆப் யுகம். அதில் வருகிற பதிவுகளை அப்படியே நம்புகிறார்கள். அதை சரியானதா என்று பார்ப்பதில்லை. உடனே ஷேர் செய்துவிடுகிறார்கள். இதனால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளும் வருகிறது. உண்மையான செய்திகள் பரவ நேரம் எடுத்துக் கொள்கிறது. ஆனால் பொய்யானசெய்தி வேகமாகப் பரவி விடுகிறது. அதனால் மாணவர்கள் அதனை பகுத்தறிந்து பகிர வேண்டும்"என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)