Skip to main content

இயக்குநர் ராஜமௌலிக்கு உறுதியளித்த உதயநிதி ஸ்டாலின்

Published on 28/12/2021 | Edited on 28/12/2021

 

udhayanidhi stalin say rrr movie release on sathyam theatre

 

இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜனவரி மாதம் 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்நிலையில் படத்தின் ப்ரீ புரொமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ராஜமௌலி, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய உதயநிதி ஸ்டாலின்," ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்  தமிழகத்தில் 3 இடங்களில் ஆர்.ஆர்.ஆர். படத்தை வெளியிடுகிறது. இயக்குநர் ராஜமௌலி மாவீரன் திரைப்படம் சத்யம் திரையரங்கில் வெளியாகவேண்டும் என ஆசைப்பட்டார். அவரின் ஆசைப்படியே மாவீரன் திரைப்படம் சத்யம் திரையரங்கில் வெளியானது. அதைப் போலவே இந்த முறையும் சத்யம் திரையரங்கில் உள்ள 6 ஸ்கிரீன்களில் 5 ஸ்கிரீன்களில் 'ஆர்.ஆர்.ஆர்' திரையிடப்படும் என உறுதியளிக்கிறேன்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆஸ்கரில் சந்திப்போம்” - வார்னரால் டென்ஷனான ராஜமௌலி  

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
ss rajamouli david warner ad viral

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவிலும் ரசிகர்களை வைத்துள்ளார். முன்னதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிரபலமடைந்த சமயத்தில் அல்லு அர்ஜுன் போல் வசனம் பேசி மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பரவலாக ரசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைய இடங்களில் புஷ்பா படத்தில் இடம்பெறும் அல்லு அர்ஜுன் ஸ்டைலை செய்து மகிழ்ந்து வந்தார். மேலும், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு புஷ்பா பட ஸ்டைலில் தனது குழந்தையுடன் சமூக வலைத்தளப் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலியோடு இணைந்து ஒரு யுபிஐ விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில், வார்னரிடம் ஃபோன் பேசும் ராஜமௌலி, அவரின் மேட்ச் டிக்கெட்டுக்கு டிஸ்கவுன்ட் கிடைக்குமா என கேட்கிறார். அதற்கு பதிலளித்த வார்னர், உங்களிடம் சம்மந்தப்பட்ட யுபிஐ செயலி பெயரைச் சொல்லி, அது இருந்தால் கேஷ்பேக் கிடைக்கும் என்கிறார். உடனே, ராஜமௌலி, “என்னிடம் வழக்கமான யுபிஐ இருந்தால்...” என கேட்க, “அப்போது டிஸ்கவுன்ட் கிடைக்க நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என வார்னர் சொல்கிறார். 

உடனே வார்னரை வைத்து ராஜமௌலி படமெடுப்பதாக காட்டப்படுகிறது. அவரை நடிக்க வைக்க படாத பாடு படுகிறார் ராஜமௌலி. அதை ஜாலியாக வெவ்வேறு காட்சிகளைக் கொண்டு காட்டப்படுகிறது. ஒரு காட்சியில், “ஆஸ்கரில் சந்திப்போம்” என ராஜமௌலியிடம் வார்னர் சொல்கிறார். அதற்கு டென்ஷனாகி ராஜமௌலி வார்னரை பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Next Story

வடசென்னை தி.மு.க வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம் (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொருத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அந்த வகையில், நேற்று (02-04-24) வடசென்னை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்குகள் கேட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை பெரம்பூர் லட்சுமி அம்மன் கோவில் அருகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.