Skip to main content

உதயநிதி, சீனு ராமசாமி... இருவருக்கும் வந்த திடீர் நற்செய்தி!

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

'தென்மேற்கு பருவக்காற்று', 'தர்மதுரை' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பல விருதுகளையும் வென்றிருக்கின்றன. சமீபத்தில் இவர் இயக்கத்தில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் வெளியாகி பாராட்டுகளை பெற்றது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி, 'பூ' ராமு உள்பட பல நடிகர்கள் நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார்.

 

kanne kalaimaneசீனு ராமசாமியின் படங்கள் நேர்மறை எண்ணங்களையும் வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் ஊட்டுபவை. உறவுகளின் சிக்கல்களையும் சிக்கல்களை தாண்டிய முக்கியத்துவத்தையும் இவரது படங்களும் பாடல்களும் பேசியிருக்கின்றன. இவரது இயக்கத்தில் உருவான இரண்டாவது படமான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் இடம்பெற்ற 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே' பாடலுக்காக பாடலாசிரியர் வைரமுத்து தேசிய விருது பெற்றார். அதன் பிறகு 'தர்மதுரை' படத்தில் இடம்பெற்ற 'எந்தப் பக்கம்' பாடலுக்காக மீண்டும் தேசிய விருது பெற்றார் வைரமுத்து. முதல் பாடல் புழுதி பறக்கும் கிராமத்து கள்ளிக்காட்டு தாயின் பாசத்தை பாடியது. இரண்டாவது பாடல் திசை மாறிப் போன நல்ல நெஞ்சத்துக்கு நம்பிக்கை ஊட்டியது. 'கண்ணே கலைமானே' படத்திலும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன.
  seenu ramasamyதற்போது விஜய் சேதுபதி நடிக்கும் 'மாமனிதன்' படத்தை இயக்கி வருகிறார் சீனு. இந்தப் படத்துக்கு இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா மூவரும் இணைந்து இசையமைக்கவிருப்பதாகக் கூறப்பட்டது. இயக்குனர் சீனுராமசாமியும் அதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாகக் கூறினார். அப்படி நிகழ்ந்து, அந்தப் படத்துக்கு வைரமுத்து பாடல்கள் எழுதினால், அது தமிழ் சினிமாவின் முக்கிய நிகழ்வாக அமையும்.

இந்நிலையில் 'கண்ணே கலைமானே' திரைப்படம் மும்பையில் நடக்கும் தாதா சாகேப் சர்வதேச திரைப்பட விழாவுக்கும் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது. கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருதையும் வென்றுள்ளது. இது தமிழ் திரையுலகுக்குப் பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வாகும்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

துணை முதல்வர் பதவி? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம் 

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Udayanidhi Stalin answered about Deputy Chief Minister position

திமுக இளைஞரணியின் 45ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், “துணை முதல்வர் பதவி உயர்வு குறித்துப் பல செய்திகள் வருகின்றன. எங்கள் அரசில் உள்ள அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்பார்கள் என்று நான் முன்பே பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறேன். திமுக ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் முதல்வரின் துணையாகத் தான் பணியாற்றி வருகின்றனர்.

எந்தப் பதவியாக இருந்தாலும், என்னைப் பொருத்தவரை இளைஞர் அணிச் செயலாளர் பதவிதான் எனக்குப் பிடித்தது. கடந்த தேர்தல்களைப் போல் 2026 தேர்தல்தான் நமது இலக்கு. எந்தக் கூட்டணி வந்தாலும் நமது தலைவர் தான் வெற்றி பெறுவார். மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பார் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். 2026 சட்டமன்றத் தேர்தலில் நமது திமுக கூட்டணிதான் வெற்றிபெறப் போகிறது.  தினமும் காலையிலும் மாலையிலும் குறைந்தது பத்து நிமிடங்களாவது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். 

Next Story

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா?; அமைச்சர் துரைமுருகன் பதில்

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Minister Durai Murugan Answer by  Udayanidhi Stalin's Deputy Chief Minister?

திமுக இளைஞரணியின் 45ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், “நான் துணை முதலமைச்சர் ஆகப்போவதாக செய்திகள் வருகின்றன. அந்த செய்திகள் அனைத்தும் வதந்திகள். அனைத்து அமைச்சர்களும், முதல்வருக்கு துணையாக இருப்போம். அது போல், திமுக அமைப்பாளர்கள் அனைவரும் முதல்வருக்கு துணையாக இருப்போம். எவ்வளவு பொறுப்பு வந்தாலும், என் மனதிற்கு மிக மிக நெருக்கமான ஒரு பொறுப்பு என்றால் அது இளைஞரணி செயலாளர் பொறுப்பு தான்” எனப் பேசினார். 

இந்த நிலையில், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், துணை முதல்வர் பதவி தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவது குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார். நான் கட்சியின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டவன். 60 ஆண்டுகளாக கட்சியின் வளர்ச்சிக்கு பாடுப்பட்டவன். கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நடப்போம். ” என்று கூறினார்.