Skip to main content

'நல்ல பெயர் வாங்கணும்னு நினைக்குறதும் லஞ்சம்தான்...' வெளியானது 'உடன்பிறப்பே' ட்ரைலர்!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

udanpirappe

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த ஜோதிகா, தற்போது பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலான நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும் நடித்துவருகிறார். அந்த வகையில், ‘கத்துக்குட்டி’ பட இயக்குநரான இரா. சரவணன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘உடன்பிறப்பே’ படத்தில் தற்போது நடித்துள்ளார். சசிகுமார், சமுத்திரக்கனி, கலையரசன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இது, நடிகை ஜோதிகாவின் 50வது திரைப்படமாகும்.

 

இப்படம் ஆயுதபூஜை தினமான அக்டோபர் 14ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் ட்ரைலரை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தின் வாயிலாக வெளியிட்ட நடிகர் சூர்யா, "உடன்பிறந்தவர்கள் மற்றும் அவர்களின் பிரிக்க முடியாத பிணைப்பு பற்றிய கதை. அவர்கள் உங்களை புன்னகைக்க, அழச் செய்ய, அதே நேரத்தில் சிரிக்கவும்  வைப்பார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

ட்ரைலர் வெளியான ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே யூ-டியூப் தளத்தில் ஒன்றரை லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Next Story

“என் துணையே, என் பலமே...” - சூர்யா பெருமிதம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
suriya wishes on jyotika Shaitaan movie release

தமிழை தாண்டி மற்ற மொழி படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார் ஜோதிகா. அந்த வகையில் மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் - தி கோர் படத்தில் நடித்திருந்தார். கடந்த வருட நவம்பரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் 'ஸ்ரீ' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. மே 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. 

இதனிடையே விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ள சைத்தான் படத்தில் நடித்துள்ளார். இதில் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோரோடு இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். பனோரமா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படம் சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. நேற்று நடந்த இப்பட ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் ஜோதிகாவுடன் கலந்து கொண்டார். இப்படம் மகளிர் தினமான இன்று வெளியாகியுள்ளது. 

இந்த நிலையில் ஜோதிகாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் சூர்யா. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “என்னவளே... என் துணையே, என் பலமே. சைத்தான் படம் மூலம் மீண்டும் உன்னுடைய புதிய பயணத்தை தொடங்குகிறாய். நீ செய்யும் அனைத்திலும் நான் பெருமை கொள்கிறேன். நிறைய அன்பும் மரியாதையும்” என குறிப்பிட்டுள்ளார். இந்தியில் ஜோதிகா நடிப்பில் 'டோலி சஜா கே ரக்கீனா' மற்றும் 'லிட்டில் ஜான்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. அதை தொடர்ந்து 23 வருடங்கள் கழித்து இந்தியில் சைத்தான் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.