Skip to main content

ஆக்சனில் மிரட்டும் த்ரிஷா

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

trisha starring Raangi  trailer released

 

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய எம்.சரவணன், த்ரிஷாவை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து இயக்கியுள்ள படம் 'ராங்கி'. லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். முருகதாஸ் கதை எழுதியுள்ளார். சத்யா இசையமைத்துள்ளார். இப்படம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசாவதாகப் படக்குழு அறிவித்தது  பின்னர் சில காரணங்களால் வெளியாகவில்லை. 

 

இதையடுத்து இப்படம் வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தினை தணிக்கை குழுவிற்கு அனுப்புகையில் 30 காட்சிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ட்ரைலரை பார்க்கையில் ஆக்சன் காட்சிகளில் த்ரிஷா மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது. இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தொடர்ந்து படம் பண்ணுங்க” - கோரிக்கைக்கு ஓகே சொன்ன விஜய்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான படம் கில்லி. ஏ.எம் ரத்னம் தயாரித்திருந்த இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்கான இப்படம் ரசிகர்களின் ஏகோபத்திய வரவேற்பை பெற்று, விஜய் மற்றும் த்ரிஷா கரியரில் ஒரு மைல் கல் படமாக மாற்றியது. இன்றளவும் விஜய் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களில் முக்கியமான படமாக இப்படம் இருந்து வருகிறது.  

இந்த நிலையில் 20 வருடம் கழித்து 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த 20ஆம் தேதி கில்லி படம் ரீ ரிலிஸானது. புது விஜய் படம் வெளியானது போல் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடனும் ஆராவரத்துடனும் படத்தை வரவேற்றனர். இரண்டு நாட்களில் ரூ.12 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் வரவேற்பு குறித்து பிரகாஷ் ராஜ் மற்றும் த்ரிஷா, அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தனர். 

இந்த நிலையில் ரீ ரிலீஸ் வரவேற்பு தொடர்பாக தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம், இயக்குநர் தரணி மற்றும் படத்தை வெளியிட்ட விநியோகிஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது விஜய்க்கு மாலை அணிவித்த சக்திவேலன், அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தார். “அரசியலுக்கும், மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால் வருஷத்திற்கு ஒரு படமாவது பண்ணுங்க. வியாபாரத்தை தாண்டி ரசிகர்களின் கொண்டாட்டம் தியேட்டரில் கூஸ்பம்ஸ் தருணமாக இருக்கிறது. அதனால் தொடர்ந்து படம் பண்ணுங்க” என்றார். இதனிடையே அவருக்கு பதிலளித்த விஜய், சரி என சொல்லிவிட்டு அவர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

vijay says yes to distributor sakthivelan request for to dont stop acting gilli re release celebration

கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் தற்போது நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைப் படத்தை தவிர்த்து இன்னொரு படத்தில் நடித்து விட்டு பின்பு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

கோலிவுட், டோலிவுட், பாலிவுட் - விஜய்யின் படத்திற்கு டாப் ஹீரோயின்கள் பரிந்துரை

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
vijay 69 heroine update

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடந்தது. தொடர்ந்து கடைசியாக கேரளாவில் நடந்து முடிந்தது. காவலன் படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேரளாவிற்கு விஜய் சென்றதால், அவருக்கு கேரள ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். படப்பிடிப்பு தளத்திலும் அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தினசரி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அவர்களிடம் விஜய் மலையாளத்தில் பேசிய வீடியோக்களும் வைரலானது. இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடப்பதாக கூறப்படுகிறது. 

vijay 69 heroine update

இப்படத்தை அடுத்து விஜய்யின் கடைசி படமாக உருவாகும் அவரது 69ஆவது படத்தை அ.வினோத் இயக்கவுள்ளதாக தகவல் உலா வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. திரிஷா, சமந்தா, மிருனால் தாக்கூர் மற்றும் பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆகிய நான்கு நடிகைகளிடமும் பேச்சு வார்த்தை நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

vijay 69 heroine update

இதனிடையே தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், தனது 69வது படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளதாக முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.