Skip to main content

மீண்டும் விஜய் படத்தில் த்ரிஷா

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
trisha do a cameo role in vijay the goat movie

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’. விஜய்யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், லைலா, வைபவ், அரவிந்த் ஆகாஷ், விஜய் ராஜ், பிரேம் ஜி என நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக், கடந்த புத்தாண்டை முன்னிட்டு வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கட் பிரபு, “இந்த மாசத்துக்குள் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸ் முடிந்து விடும். வெளிநாட்டில் 1 ஷெட்யூல் இருக்கு. அதோட மொத்த படப்பிடிப்பும் முடியுது. நிறைய பாடல்கள் படத்தில் இருக்கு. ஃப்ர்ஸ்ட் சிங்கிள் வெளியாக மே ஆகிடும்” என பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இப்படத்தில் விஜய் ஒரு பாடல் பாடியுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா சமீபத்திய இசை நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இப்படத்தில் த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பில் இரண்டு நாள் கலந்து கொண்டுள்ளதகவும் கூறப்படுகிறது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஆறாவது முறையாக விஜய்யுடன் இணைந்து அவர் நடிக்கிறார். ஆதி, திருப்பாச்சி, கில்லி, குருவி, லியோ கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

“விஜய்க்கும் அந்தப் பெண்ணிற்கும் பிடிக்காதவர்கள் செய்திருக்கலாம்” - சர்ச்சை குறித்து ஜெய் ஆகாஷ்

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
actor jai akash about his rumour and vijay

இயக்குநர் கே. பாலச்சந்தர் தயாரிப்பில் ரோஜாவனம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகர் ஜெய் ஆகாஷ் . தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ஜெய் ஆகாஷை சந்தித்தோம். அப்போது அவரது சினிமா வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட சில கசப்பான அனுபவங்களை  நம்மிடையே  பகிர்ந்து கொண்டார். 

அவர் பேசுகையில், “ரோஜாக் கூட்டம்  படம் சூப்பர் ஹிட் ஆனதற்குப் பிறகு, நிறைய படங்கள் எனக்கு வந்தது. அந்த நேரத்தில் நான் படம் பண்ணாமல் இருந்ததற்குக் காரணம் என்னைப் பற்றிய  பொய்த் தகவல்கள் எல்லாம் க்ளியர் ஆக வேண்டும் என்பதற்காகத்தான். நான் டிகிரி முடித்து வந்ததும் மணிரத்னம்  என்னை 'அலைபாயுதே' படத்திற்காக அழைத்தார். சுஹாசினி என்னை 'ரோஜா வனம்' படத்திற்கு நான் சரியாக இருப்பேன் என என்னிடம் சொன்னார். அந்த சமயத்தில்தான் தமிழ் எனக்குச் சரியாகப் பேச வராத  காரணத்தால் 'அலைபாயுதே' படத்திற்கு தேர்வு செய்யாமல், 'ரோஜா வனம்' படத்தில் இரண்டாவது ஹீரோவாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார்கள், அப்படித்தான் நான் அந்த படம் பண்ணினேன். 

அப்போதுதான் அந்த ரூமர் உருவானது. அது என்னை ரொம்ப அப்செட் ஆக செய்தது. அதைக் கேட்கும் போதெல்லாம் என்னால் ஒரு குடும்பத்தில் பிரச்சனையும் அந்தப் பெண்ணிற்குக் கெட்ட பெயரும் வந்துவிடக்கூடாது என்று நினைத்தேன். யாரோ விஜய்க்கும் அந்தப்  பெண்ணிற்கும் பிடிக்காத  நபர்கள் இதைச் செய்திருக்கலாம். அது மிகவும் மோசமான ஒன்று. அதில் ஏன் என் பெயரை இழுத்தார்கள் என்று தெரியவில்லை. நான் விஜய்யை அடிக்கடி  விமான பயணத்தின்போது பார்த்தால் பேசுவேன், அவர் ஹைதராபாத் வந்தால் சந்திப்பேன், அவர் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ அதுபோல ஆகாஷ் அப்படி இல்லை என்று  என்னைப் பார்க்கும்போது அவருக்கும் தெரிந்திருக்கும். அந்த ரூமர் யாரோ உருவாக்கியது” என்றார்.

Next Story

“விஜய் கூறிய விவரங்கள் நெகிழவைத்து” - நித்திலன் சாமிநாதன்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
nithilan saminathan about vijay praised his maharaja movie

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது. 

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் நிலையில் 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நித்திலன் சாமிநாதன், “டியர் விஜய் அண்ணா, இந்த சந்திப்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு பெருமையாக உணர்கிறேன். மகாராஜாவைப் பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னைப் நெகிழவைத்தது. அது எனக்கு பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. லவ் யூ ணா” என பதிவிட்டுள்ளார்.