Skip to main content

சர்ச்சை ஆடியோ குறித்து டாம் க்ரூஸ் விளக்கம்!

Published on 13/05/2021 | Edited on 13/05/2021

 

Tom Cruise

 

'மிஷன் இம்பாசிபிள் 7' படக்குழுவினரை நடிகர் டாம் க்ரூஸ் கடுமையாகத் திட்டிய ஆடியோ பதிவு ஒன்று கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பல மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக அப்பதிவு குறித்து நடிகர் டாம் க்ரூஸ் விளக்கமளித்துள்ளார்.

 

நடிகர் டாம் க்ரூஸ், 'மிஷன் இம்பாசிபிள் 7' படத்தில் நடிகராகவும் இணைத் தயாரிப்பாளராகவும் செயல்பட்டுவருகிறார். முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பானது, கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. பரவலின் வேகம் குறையைத் தொடங்கியதும் படப்பிடிப்பு நடத்துவதற்கு கிடைத்த அனுமதியைத் தொடர்ந்து, லண்டனில் ஆளில்லாத பழைய விமான தளத்தில் செட் அமைத்து, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றுவோரின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு பல லட்சம் டாலர்களை டாம் க்ரூஸ் செலவு செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், படப்பிடிப்பு தளத்தில் சிலர் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவில்லை. இதனால் கோபமடைந்த டாம் க்ரூஸ் அவர்களைக் கடுமையாகத் திட்டினார். இது இணையத்தில் கசிந்ததும் டாம் க்ரூஸின் செயலுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

 

இதுகுறித்து பல மாதங்களுக்குப் பிறகு மனம் திறந்துள்ள டாம் க்ரூஸ், "நான் கூறியது கூறியதுதான். அதற்காக நிறைய விலை கொடுத்திருந்தோம். ஒட்டுமொத்தக் குழுவையும் நான் திட்டவில்லை. மற்றவர்களை வெளியே அனுப்பிவிட்டு, விதிமீறலில் ஈடுபட்ட ஒரு சிலரை மட்டுமே திட்டினேன். அப்படி இருந்ததால்தான் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. அன்று என் மனதில் பல உணர்வுகள் ஓடிக்கொண்டிருந்தன. படப்பிடிப்பைத் தொடங்குகிறோம் என்பதே எங்கள் மொத்த குழுவுக்கும் பெரிய நிம்மதியாக இருந்தது" எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஷூட்டிங்கிற்காக ஸ்பேஷ் ஸ்டேஷன் செல்லும் டாம் க்ரூஸ்! 

Published on 26/09/2020 | Edited on 26/09/2020
tom cruise

 

 

ஸ்பேஸில் நடப்பது போன்ற கதையை யோசித்து அதை கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கி படம் எடுப்பது என்பது தற்போதையை கணினி உலகில் மிகவும் எளிதான ஒன்றாக மாறியிருக்கிறது. பலரும் பலவிதமான ஸ்பேஸ் கதைகளைப் பார்த்து வருகின்றனர். ஆனால், நேரடியாக ஸ்பேஸில் இதுவரை யாரும் படம் எடுக்கவில்லை.

 

அந்த யுக்தியைக் கையாண்டு படமெடுக்க ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸும், தொழிலாதிபர் எலன் மஸ்க்கும், நாசாவும் திட்டம் தீட்டியுள்ளது. ரிட்டர்ன் ஃப்ரம் ஆர்பிட் என்ற ரஷ்ய படத்தில் குறிப்பிட்ட காட்சிகள் விண்வெளியில் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேறு யாரும் விண்வெளியில் முழு நீளப்படத்தை எடுக்கவில்லை. 

 

நடிகர் டாம் க்ரூஸை வைத்து விண்வெளிக்குச் சென்று முழு நீல ஆக்‌ஷன் படத்தை உருவாக்க நாசாவும், நடிகர் டாம் க்ரூஸும் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியதாகச் சொல்லப்பட்டது.

 

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (21.09.20) அன்று ஸ்பேஸ் ஷட்டில் அல்மனாக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு விண்கலத்தின் புகைப்படமும் அதில் பயணம் செய்யவுள்ள நபர்களின் பெயர்களை அடங்கிய பட்டிலும், அவர்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.

 

அந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் மற்றும் இயக்குனர் டக் லிமான் இருவரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இதனைக் கண்ட ஹாலிவுட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்து அதை தங்கள் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கினார். இதனால் இந்த தகவல் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

 

 

Next Story

விண்வெளியில் டாம் க்ரூஸ் பட ஷூட்டிங்... நாசாவுடன் பேச்சுவார்த்தை!

Published on 06/05/2020 | Edited on 06/05/2020

 

tom cruise

 

ஸ்பேஸில் நடப்பது போன்ற கதையை யோசித்து அதை கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கி படம் எடுப்பது என்பது தற்போதையை கணினி உலகில் மிகவும் எளிதான ஒன்றாக மாறியிருக்கிறது. பலரும் பலவிதமான ஸ்பேஸ் கதைகளைப் பார்த்து வருகின்றனர். ஆனால், நேரடியாக ஸ்பேஸில் இதுவரை யாரும் படம் எடுக்கவில்லை.

அந்த யுக்தியைக் கையாண்டு படமெடுக்க ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் க்ரூஸும், தொழிலாதிபர் எலன் மஸ்க்கும், நாசாவும் திட்டம் தீட்டியுள்ளது. ரிட்டர்ன் ஃப்ரம் ஆர்பிட் என்ற ரஷ்ய படத்தில் குறிப்பிட்ட காட்சிகள் விண்வெளியில் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வேறு யாரும் விண்வெளியில் முழு நீளப்படத்தை எடுக்கவில்லை.
 

தற்போது வெளியான ஒரு தகவலில், நடிகர் டாம் க்ரூஸை வைத்து விண்வெளிக்குச் சென்று முழு நீல ஆக்‌ஷன் படத்தை உருவாக்க நாசாவும், நடிகர் டாம் க்ரூஸும் சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், அவர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியால் விண்வெளிக்கு படக்குழுவுடன் பயணம் மேற்கொண்டு படமெடுக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
 

நடிகர் டாம் க்ரூஸ் இதுவரை தான் நடித்த படங்களில் எந்த எல்லைக்கும் சென்று ரிஸ்க்கான காட்சிகளில் டூப் போடாமல் நடிக்கும் துனிச்சல்மிக்கவர் என்பது அனைவரும் அறிந்ததே, அதனால் இந்தப் பேச்சுவார்த்தை வெறும் பேச்சாக இல்லாமல் செயலாகவும் மாறும் என்று பலரும் எதிர்பார்ப்பதாகச் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.