thiruneriyaaru book release function

எழுத்தாளர், நடிகர், இணை தயாரிப்பாளர் திருவரணார் எழுதிய ‘திருநெறியாறு’ நூல் வெளியீட்டு விழா சென்னை கிளார்க் பள்ளி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்றதுடன் இந்த நூலை சோ.மதுமதி ஐஏஎஸ் ( செயலர், மாற்றுத்திறனாளி நலத்துறை, தலைமை செயலகம் ) வெளியிட்டார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெ.குகன் கீதா இந்த நூலை பெற்றுக்கொண்டார். கன்னியாகுமரியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் தா.ஞானசீலன் உடற்கல்வி ஆசிரியர் நூலின் இரண்டாம் படியை பெற்றுக் கொண்டார். திரைப்பட இயக்குநர் ராஜமோகன் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் நூலாசிரியர் திருவரணார் பேசுகையில், “அடிப்படையில் நான் படித்தது இயந்திரவியல் பட்டய படிப்பு. எனக்கும் தமிழுக்கும் எப்படி ஒரு பிணைப்பு ஏற்பட்டது என்பதை என்னால் அறுதி இட்டு கூற முடியவில்லை படித்துப் பட்டம் பெற்று அரசு பணியில் சேர வேண்டும் என்பதுதான் என் தலையாய நோக்கமாக இருந்தது. ஐஏஎஸ் படிக்க விரும்பினேன். அது ஆனால் அது நடக்கவில்லை. அதனால் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி இந்த நூலை வெளியிட வேண்டும் என விரும்பினேன்” என்றார்.