![Thiruchitrambalam first single release date announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/BbvzBkanvSQ_S9Aqd3V39dPrGTeFvvm8W-ZDQcgq0vs/1655905027/sites/default/files/inline-images/853_6.jpg)
செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வெளியீட்டு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்சிற்றம்பலம் படத்தின் முதல்பாடலான தாய் கிழவி என்ற பாடல் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை அனிருத் இசையில் நடிகர் தனுஷ் எழுதிப் பாடியுள்ளார். நாட்டாமை படத்தில் நடிகர் பொன்னம்பலம் தாய் மனோரமாவை பார்த்து தாய்க்கிழவி என்று ஆக்ரோஷமாகப் பேசும் வசனத்தைப் பாடலின் முதல் வரியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட தனுஷ் 7 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் DNA (தனுஷ் அண்ட் அனிருத்) இந்த கூட்டணி இணைந்துள்ளது. இது சிறப்பான ஒன்று என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.
#Thiruchitrambalam First single from June 24 .. A #DNA single after 7 years !! Yes , It is special. pic.twitter.com/c2al2oTFg5— Dhanush (@dhanushkraja) June 22, 2022