நடிகர் விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர்கள் வெளியிட மாட்டோம் என்று முடிவு செய்துள்ளார்களே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நடிகரும், திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன், "விஜய் ஒரு பெரிய ஹீரோ; அஜித் ஒரு பெரிய ஹீரோ; இரண்டு பேரும் சமமான ஹீரோக்கள். அதுல விஜய்க்கு 300 தியேட்டரு, இங்க 800 தியேட்டர்லாம் கொடுக்க மாட்டாங்க. அது மனசாட்சி இல்லாத செயல். 50:50 கண்டிப்பா கிடைக்கும். இரண்டு பேரும் பவர்ஃபுல் ஹீரோஸ். அது தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும்.
அங்க ஆந்திராவுல, அந்த தெலுங்கு திரைப்பட தொழில காப்பாத்துற ஊர். அதனால அந்த ஹீரோ, அந்த முதலாளி, அவன் போட்ட முதல காப்பாத்தணும்னு அவன் நினைக்கிறான். விஜய் படம் இங்க ரிலீஸு. அங்கயும் ரிலீஸு. ஆனா பாலகிருஷ்ணா படம் இங்க ரிலீஸா? அப்ப அந்த முதலீட்டைக் காப்பாத்தணும்னு அந்த அசோசியேஷன் நினைக்குது. படம் வேணாம்னு சொல்லல. வாரிசு பட புரொடியூசர் தெலுங்கு; டைரக்டர் யாரு, தெலுங்கு டைரக்டர். தெலுங்கு படத்துல ஹீரோஸ் நல்லா ஒத்துழைப்பு தராங்க. அத பண்ணனும். தமிழ் ஹீரோவுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுத்து, 25 கோடியை கூட கொடுத்துட்டு என் தமிழ் சினிமா மார்க்கெட்ட கெடுத்தா, இனி இந்த ஹீரோ 25 கோடி கம்மியா வாங்குவாரா இங்க.
இங்க வாங்குன சம்பளத்தை விட எதுக்கு 25% கூட்டுனீங்க. அப்ப அடுத்த ஹீரோ இங்க, எங்க தமிழனால இந்த சம்பளம் கொடுக்க முடியுமா? என் கவலை அதுதான்; வேற ஒண்ணுமில்லை. எங்க ஹீரோ விஜய் படம் நல்லா ஓடணும். அஜித் படம் நல்லா ஓடணும். தெலுங்குக்கு போய் அவங்க மார்க்கெட்ட கெடுத்துக்க, அந்த அசோசியேஷனும், அந்த கவுன்சிலும் விரும்பவில்லை. அதுக்காக எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. விஜய் படம் வாரிசு அங்கு நிச்சயம் ரிலீஸ் ஆகுது. 35% விஜய்க்கு அங்க மரியாதை அவ்ளோதான்.
இங்க 50:50. அஜித்துக்கு 50. விஜய்க்கு 50. இரண்டு படமும் இங்க நல்லா ஓடும். ஆந்திராவ கொண்டாந்து வந்து இங்க சேக்காதீங்க. அங்க போனதே தப்பு தமிழ் ஹீரோக்கள். தமிழ் புரொடியூசரைக் காப்பாற்றுங்கள். நீங்க ஒன்னும் தெலுங்கு போய் காப்பாத்த வேண்டிய அவசியம் இல்ல. அங்க ஹீரோஸ் நல்லாருக்காங்க. புரொடியூசருக்கு நல்லா ஒத்துழைப்பு தராங்க. நீங்க இங்க ஒத்துழைப்பைத் தர கத்துக்கோங்க.” என்று காட்டமாகப் பேசினார்.