Skip to main content

தளபதி 67 அப்டேட் எப்போது? தேதியை சொன்ன லோகேஷ் கனகராஜ் - வெயிட்டிங்கில் ரசிகர்கள்

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

thalapathy 67 update by lokeesh kanagaraj

 

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடி ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், சில தினங்களுக்கு முன்பு படத்தின் வெற்றிவிழாவை படக்குழுவினர் கொண்டாடியுள்ளார்கள். 

 

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாகவும், வில்லன்களாக சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடிப்பதாகவும் நம்பத்தகுந்த சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ்' வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்து கொண்டே வருகிறது. இன்னும் சில நாட்களில் இப்படத்தின் அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு தரப்பு தெரிவித்தது. 

 

அந்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், எந்த நாட்களில் அப்டேட் வெளியாகும் என்பதை தற்போது லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாக விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள 'மைக்கேல்' படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' தயாரித்துள்ளார்கள். இப்படம் வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதால் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். 

 

அந்த வகையில் ஒரு தனியார் கல்லூரியில் நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில், "தளபதி 67 படம் நூறு சதவீதம் என் பட ஸ்டைலில் தான் இருக்கும். படத்தின் அப்டேட் பற்றிய ஹின்ட் மட்டும் தருகிறேன். அப்டேட் பிப்ரவரி 1, 2 அல்லது 3 தேதிகளில் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். 

 

முன்னதாக விஜய்யை வைத்து மாஸ்டர் படம் 50 சதவீதம் என் ஸ்டைலில் இருக்கும் எனவும் 50 சதவீதம் விஜய் ஸ்டைலில் இருக்கும் எனவும் தெரிவித்த நிலையில், தளபதி 67 படம் 100 சதவீதம் என் ஸ்டைலில் இருக்கும் என லோகேஷ் சொல்லியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், விக்ரம் பட பாணியில் ஒரு அறிவிப்பு டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது சர்ச்சை - விஜய் பாடலுக்கு எதிராகப் புகார் 

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
complaint against vijay the goat song whistle podu lyrics

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. விஜய்யுடன் இணைந்து இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்க மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல், படத்தில் ஒரு குழுவாக பணியாற்றும் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் ஜாலியாக ஒரு பார்ட்டி செய்யும் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பாடலில் ‘கேம்பைன தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா’ என விஜய்யின் அரசியல் டச்சும், ‘நண்பா நண்பி விசில் போடு’ என விஜய்யின் ஃபேவரட் டயலாக்குகளும் இடம்பெறுகின்றன.  

இந்த நிலையில் இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த புகார் மனு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மனுவில், “நடிகர் விஜய் தொடர்ந்து பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதைப் பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.!

அதிரடி கெளப்பட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது. மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை, ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ், விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் விஜய். குடிமக்கள் தான் நம் கூட்டணி, விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயைத் திறக்கும் நடிகராக விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் விஜய் செயல்பட்டு வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி தான்’ பாடல் லிரிக் வீடியோ வெளியான போது, விஜய் புகைபிடித்துக் கொண்டே பாடல் முழுவதும் நடனமாடியது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்க பின்பு அப்பாடலில் 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய்யின் படங்கள், தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் தற்போது தி கோட் படத்திற்கும் அது தொடர்கிறது. 

Next Story

அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகள் - பிஸியாகும் ராகவா லாரன்ஸ்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
raghava lawrence next with lokesh kanagaraj benz, ar murugados asoosociate venkat mohan in hunter

ராகவா லாரன்ஸ் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது விஜயகாந்த்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிக்கும் படைத் தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார். படங்களில் நடித்துக் கொண்டே நிறைய ஏழை எளிய குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு உதவி செய்து வருகிறார். இதனிடையே விஜய் கட்டிய கோயிலுக்கு விஜய்யின் தாயார் ஷோபாவுடன் அண்மையில் சென்றிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.  

raghava lawrence next with lokesh kanagaraj benz, ar murugados asoosociate venkat mohan in hunter

இந்த நிலையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. முதலில் லோகேஷ் கனகராஜ் கதையில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் பென்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். மேலும் வெளியிடவும் செய்கிறார். 

இப்படத்திற்குப் பின் அடுத்த படமாக, சத்ய ஜோதி மற்றும் கோல்டு மைன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில் ஹண்டர் என்ற தலைப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏ.ஆர் முருகதாஸிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையாக இப்படம் வெளியாகவுள்ளது.