Skip to main content

தளபதி 67 - மாஸ் என்ட்ரி கொடுத்த விஜய்; டீப் டிஸ்கஷனில் த்ரிஷா

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

thalapathy 67 pooja video released

 

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலிலும் ரூ. 250 கோடியை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்தது. 

 

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், நேற்று படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அனிருத் இசையில் உருவாகும் இப்படம் 'லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்' வகையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்துகொண்டே வருகிறது.

 

இந்த வாரம் தொடர்ந்து இப்படத்தின் அப்டேட் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்த நிலையில், தற்போது படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நடிகர் மற்றும் நடிகைகள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஷ்கின், மன்சூர் அலி கான், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், இயக்குநர் கவுதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் இணைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

 

மேலும் 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் பூஜை விழா வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வீடியோவில் விஜய் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் நடிகர் அர்ஜுனுடன் டீப் டிஸ்கஷனில் த்ரிஷா ஈடுபட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்