Skip to main content

'தளபதி 66' ; புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

'Thalapathy 66'; The film crew released the new announcement

 

விஜய், பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'தளபதி 66' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். குடும்பங்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைப் பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது. 

 

இந்நிலையில் 'தளபதி 66' படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் ஷியாம் மற்றும் யோகிபாபு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் 2023-ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாகும் என  படக்குழு அறிவித்துள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

போராட்டக்காரர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிரகாஷ் ராஜ்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
prakash raj celebrate his birthday with sonam wangchuk protest

பிரகாஷ் ராஜ் கடைசியாக மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடித்திருந்தார். தமிழில் பொன்னியின் செல்வன் 2 படத்தில் நடித்திருந்தார். இப்போது தனுஷின் ராயன், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2, ஜூனியர் என்.டி.ஆரின் தேவரா உள்ளிட்ட சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களை கைவசம் வைத்துள்ளார். 

தமிழ், மலையாலம், கன்னடம், இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் நடித்துள்ள பிரகாஷ் ராஜ் 5 முறை தேசிய விருது வென்றுள்ளார். நடிப்பதை தாண்டி இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். திரைப்படங்களைத் தாண்டி அரசியல் ரீதியாக தனது கருத்துகளை தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார். மேலும் பா.ஜ.க-வை தீவிரமாக எதிர்த்து வருகிறார்.  

prakash raj celebrate his birthday with sonam wangchuk protest

இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார் பிரகாஷ் ராஜ். அவருக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும் அரசியல் சாசனத்தில் ஆறாவது அட்டவணையை அமல்படுத்தக்கோரியும் பொறியியலாளர் மற்றும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நடத்தி வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளதாக பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நமக்காக, நம் நாட்டிற்காக, நமது சுற்றுச்சூழலுக்காக, நமது எதிர்காலத்திற்காக போராடும் லடாக் மக்களுடன் துணை நிற்போம். சோனம் வாங்சுக்கின் போராட்டத்தில் கலந்துகொண்டு எனது பிறந்தநாளைக் கொண்டாடினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தம்பி, தங்கைகளே...” - த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்து

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
vijay wishes 10 students for public exam

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (25.03.20240) முதல் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 8 வரை நடைபெறவுள்ள இந்த தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதியும் வெளியிடப்படுகிறது.  

இந்த நிலையில் மாணவ, மாணவிகள் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர் அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர் அல்லாது திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாத இறுதியில் ராஷ்மிகா மந்தனா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில் நடிகரும் த.வெ.க-வின் தலைவருமாகிய விஜய் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் எக்ஸ் வலைத்தள பதிவில், “தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை,  நாளை எழுதவுள்ள என் அருமை தம்பி, தங்கைகள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற, நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என விஜய் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விஜய் கடந்த ஆண்டு ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.