/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/191_2.jpg)
'மாஸ்டர்' படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருந்த நடிகர் விஜய், தன்னுடய அடுத்த படத்திற்காக 'கோலமாவு கோகிலா' படப்புகழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் கைகோர்த்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். 'தளபதி 65' எனத் தாற்காலிகமாகப் பெயரிட்டு பூஜையுடன் சென்னையில் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிற்காக ஜார்ஜியா விரைந்தது. அங்கு படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படக்குழு இந்தியா திரும்பியது.
இந்த நிலையில், 'தளபதி 65' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'பீஸ்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் இயக்குநரான நெல்சன் திலிப்குமார் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். மேலும்,ஜுலை 22ஆம் தேதியான நாளைய தினம் நடிகர் விஜய்யின் பிறந்தநாளாகும். அதனை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
விஜய்யின் பிறந்தநாளான நாளை, 'பீஸ்ட்' படம் குறித்த கூடுதல் அப்டேட்டோ அல்லது விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 குறித்த அறிவிப்போ வெளியாகலாம் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)